பெண்ணொருவரின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததால் 2 ஆண்டுகள் கழித்து பிரபல மருத்துவர் கைது!!

305

சென்னை…

பக்கத்து வீட்டு பெண்ணிடம் ஏற்பட்ட பிரச்சனையில், வீட்டு முன்பு சிறுநீர் கழித்து மிரட்டல் விடுத்த வழக்கில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய மருத்துவர் சண்முகம் சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜக, ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பியின் முன்னாள் தலைவரும் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவருமாக டாகர் சண்முகம் சுப்பையா இருந்தார்.

சென்னையில் மருத்துவர் சுப்பையா வசிக்கும் குடியிருப்பில் 62 வயது பெண்மணியுடன் தகராறு செய்தது குறித்த அப்பெண்மணி புகார் தெரிவித்த நிலையில், அப்பெண்மணியின் வீட்டின் முன்பாக சுப்பையா குப்பைகளைக் கொட்டி சிறுநீர் கழிக்கும் சிசிவிடி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இந்த சம்பவம் கடந்த 2020ஆம் ஆண்டு நடந்தது, இது தொடர்பில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதிலும் கைது செய்யப்படாமல் இருந்தார்.

இந்நிலையில் பாஜகவின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி. முன்னாள் தலைவர் மருத்துவர் சுப்பையா தற்போது இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் அவர் மீது கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.