பெண் என நினைத்து திருநங்கையுடன் காதல் : இளைஞர் ஏமாற்றியதால் விபரீத முடிவு!!

314

சென்னை….

சென்னை காசிமேட்டை சேர்ந்த 7 ஆம் வகுப்பு வரை படித்த சிறுவன் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக திருநங்கையாக மாறியுள்ளார்.

16 வயதான இந்த திருநங்கை சில வருடங்களாக தனது குடும்பத்தை விட்டு விட்டு ராயபுரம் மீனாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த ஆண்ட்ரியா என்ற திருநங்கையுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருந்த திருநங்கை தனது புகைப்படத்தை அவ்வப்போது பதிவிட்டு வந்துள்ளார்.

இதனை பார்த்த ஓசூரை சேர்ந்த மஞ்சுநாத் என்பவர் பெண் என நினைத்து அவருடன் நண்பராக பழகி பின் காதலித்து வந்துள்ளனர். இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இன்ஸ்டாகிராமில் காதல் செய்துள்ளனர்.

ஒருகட்டத்தில் திருநங்கை தனது நிலையை மஞ்சுநாத்திடம் சொல்லவே மஞ்சுநாத் உன்னை திருமணம் செய்து கொள்ள எனது குடும்பத்தில் கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள் எனவே நான் விலகிக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

இதனால் மன அழுத்தத்தில் இருந்து அவர், நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் வீட்டிற்கு வந்த ஆண்ட்ரியா திருநங்கை தற்கொலை செய்து கொண்ட கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் அங்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.