மத்தியபிரதேசம்….
மத்தியபிரதேச மாநிலம் டிவாஸ் மாவட்டம் நரியஹிடா என்ற கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமி- பப்லு ஜாலா தம்பதி. இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஆனால், பெண் குழந்தை பிறந்தது என்னவோ பப்லுவுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் பிடிக்கவில்லை. இதனால், பப்லு ஆத்திரத்தில் தனது மனைவி லெட்சுமியை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து அடித்து துன்ப படுத்தி வந்துள்ளார்.
இதில் லெட்சுமியின் மாமனார், மாமியார் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
கொடூரத்தின் உச்சமாக லெட்சுமியின் கை மற்றும் கால்களில் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் இணைந்து இரும்பு கம்பியால் சூடு வைத்துள்ளனர்.
இந்நிலையில் கணவனும் அவரது குடும்பத்தாரும் இணைந்து லெட்சுமியை கொடுமைப்படுத்தி வந்தது லட்சுமி உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து கணவனிடம் இருந்து லெட்சுமியை மீட்ட அவரது உறவினர்கள் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண் குழந்தை பிறந்ததால் மனைவிக்கு இரும்பு கம்பியால் சூடி வைத்த கணவர் மற்றும் குடும்பத்தினரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.