இளம் இசையமைப்பாளர்கள் நிறைய பேர் தமிழ் சினிமாவில் இருக்கின்றனர். அதில் சிறு வயதிலேயே இசை பக்கம் வந்து தற்போது சாதனையாளராக வலம் வருபவர் அனிருத்.
முன்னணி நடிகர்களான அஜித், விஜய் படங்களுக்கு ஏற்கெனவே இசையமைத்துவிட்டார். அடுத்து அவரின் நீண்டநாள் கனவான சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு புதிய படத்தின் மூலம் இசையமைக்க இருக்கிறார். அப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இசையை தாண்டி அனிருத் படங்களில் நடிக்க இருக்கிறார் என்று ஏற்கெனவே நிறைய செய்திகள் வந்தன. தற்போது நிஜமாகவே அவர் ஒரு படம் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
தற்போது என்னவென்றால் பெண் கெட்டப்பில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் இருப்பது இசையமைப்பாளர் அனிருத் தான், அப்படியே அச்சு அசலாக பெண் போன்றே இருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் அந்த புகைப்படத்தில் இருப்பது அனிருத் இல்லையாம், ஒரு மாடல் அழகி.]