சென்னையில் பெற்றெடுத்த குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த தாயை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பிரியங்கா என்ற பெண்மணி தனது 14 வயதிலேயே வேரு என்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். வேலு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன்பிறகு தனியாக வாழ்ந்த பிரியங்கா அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்ற வாலிபரோடு குடும்பம் நடத்தினார். அவர்களுக்கு ஸ்ரீமதி (வயது 3), புஷ்பம் (1½) என்ற பெண் குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில், அவரது 2-வது கணவர் தினேஷ்குமாரும் வழக்கு ஒன்றில் கைதாகி சிறை சென்றார்.
இந்நிலையில் சிறையில் இருந்து விடுதலையாகி வந்த முதல் கணவர் வேலுவுடன், பிரியங்கா தற்போது சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
வேலுவும், அவருடன் சேர்ந்து பிரியங்காவும் மது அருந்துவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு போதையில் இருந்த அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பிரியங்கா பரிமாறிய பிரியாணி ருசியாக இல்லை என்று வேலு சண்டைபோட்டார்.
அந்த சண்டையால் ஏற்பட்ட கோபத்தில் பிரியங்கா குழந்தை மீது தனது கோபத்தை திசைதிருப்பியுள்ளார். தனது 2-வது குழந்தை புஷ்பத்தை கீழே தள்ளி காலால் மிதித்து அடித்துள்ளார். அதில் குழந்தையின் மூக்கு, வாயில் இருந்து ரத்தம் வடிந்தது,
இதனைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் குழந்தை பரிதாபமாக இறந்துபோனது.
குழந்தையின் உடலில் காயங்கள் இருப்பதாகவும், எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்றும், குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும்மருத்துவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
நேற்று புஷ்பத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் குழந்தை கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் குழந்தை புஷ்பத்தை காலால் மிதித்ததை பிரியங்கா ஒப்புக்கொண்டார். இதனால் கொலை வழக்கில் பிரியங்காவும், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக வேலுவும் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.