பெற்றோருக்கு WHATSAPP-ல் மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவி : கதறும் பெற்றோர்!!

325

தஞ்சாவூர்….

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் பவித்ரா. இவர் சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டி.ஃபார்ம் படித்து வந்தார். கல்லூரி சென்று வருவதற்காகத் தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்தார்.

இந்நிலையில் திடீரென அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விடுதி மாணவிகள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அங்கு வந்த போலிஸார் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் போலிஸார் மாணவி மரணம் குறித்து விசாரணை நடத்தியதில், பவித்ரா இறப்பதற்கு முன் தனது பெற்றோர்களுக்கு வாட்ஸ்-அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பியது தெரியவந்தது.

அதில், ‘என்னால் கல்லூரியில் நன்றாகப் படிக்க முடியவில்லை. இருப்பினும் நீங்கள் பணம் கட்டி என்னை படிக்க வைக்க மிகவும் கஷ்டப்படுகிறீர்கள்.

இதனால் நான் உங்களை விட்டுச் செல்கிறேன்’ எனத் தெரிவித்திருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

படிக்க முடியாததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.