ஐஸ்வர்யா…………….
பெற்றோரை காப்பாற்ற, மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கையை பெற உதவுமாறு ஃபேஸ்புக்கில் கண்ணீர்மல்க பெண் விடுத்த வேண்டுகோளை அடுத்து, அவருக்கு பலரும் உதவிகள் செய்து மனிதநேயம் மடிந்துவிடவில்லை என நிரூபித்துள்ளனர்.
சென்னையை அடுத்த ஆவடியை சேர்ந்த ஐஸ்வர்யா என்பவர், இன்று காலை ஃபேஸ்புக் லைவில் அவசர உதவி கேட்டிருந்தார்.
கொரோனாவால் 15 நாட்களுக்கு முன்பு சகோதரனை இ.ழ.ந்த நிலையில், தாயும் தந்தையும் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடுவதாக கண்ணீருடன் அப்பெண் கூறியிருந்தார்.
பெற்றோரைக் காப்பாற்ற மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கையை பெற உதவுமாறு அவர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த அவசர உதவி கோரும் அழைப்பை ஃபேஸ்புக்கில் கண்ட பலரும் உடனடியாக ஆதரவுக் கரம் நீட்டியுள்ளனர்.
ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் எந்தெந்த மருத்துவமனைகளில் உள்ளன என்ற விவரங்களை தன்னார்வலர்கள் அளித்துள்ளனர். இதேபோல, சகோதரனை இ.ழ.ந்து, பெற்றோரைக் காக்க போராடும் அப்பெண்ணுக்கு பலரும் பண உதவியும் அளித்துள்ளனர்.
இந்த தகவல்களை உறுதிப்படுத்தியுள்ள ஐஸ்வர்யா, தமது பெற்றோர் சிகிச்சைக்குப் பிறகு தற்போது மருத்துவமனையில் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.