பெற்ற மகளை 6 மாதமாக சீரழித்த தந்தை… இதற்கு அவர் கூறும் காரணம் என்ன தெரியுமா?

699

குர்கானில் 37 வயது மதிக்கத்தக்க தந்தை தனது முதல் மனைவிக்கு பிறந்த 13 வயது மகளை 6 மாதங்களாக பலாத்காரம் செய்தார். இதை கையும் களவுமாக பிடித்த அந்த நபரின் இரண்டாவது மனைவி பொலிஸில் பிடித்துக் கொடுத்துள்ளார்.

குர்கான் அருகே பட்டோடி என்ற இடத்தை சேர்ந்தவர் பிண்டு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள கிராமத்தில் ஒரு சிறிய தொழிற்சாலையில் வசித்து வருகிறார்.

பணி முடிந்ததும் இவர் தனது குடும்பத்தினருடன் அங்கேயே தங்கிவிடுவார். பிண்டுக்கு முதல் மனைவிக்கு பிறந்த 13 வயது மகள் மற்றும் 2-ஆவது மனைவிக்கு பிறந்த 3 குழந்தைகள் என 4 பேர் உள்ளனர்.

பிண்டு கடந்த 6 மாதங்களாக 13 வயது சிறுமி, அதாவது தனக்கும் முதல் மனைவிக்கும் பிறந்த குழந்தையை பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதை வெளியே கூறக் கூடாது என்று மிரட்டியுள்ளார்.

இதன் அச்சமடைந்த அந்த சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்தாள். ஆனால் நாளுக்கு நாள் பிண்டுவின் தொல்லை தாங்க முடியாததால் தனது மாற்றாந்தாயிடம் நடந்தவற்றை கூறினார். ஆனால் அவரோ சிறுமி கூறுவதை நம்பவில்லை.

எனினும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அந்த மாற்றாந்தாய் சீக்கிரமாக வீடு திரும்ப முடிவு செய்தார். அதன்படி வீடு திரும்பியவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. தனது மகள் என்றும் பாராமல் பிண்டு அந்த சிறுமியை பலாத்காரம் செய்ததைக் கண்டு அவரை பிடித்து பொலிஸில் ஒப்படைத்தார்.

பின்னர் அந்த சிறுமியை பொலிஸார் மாற்றாந்தாயுடன் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொலிஸார் கூறுகையில் இந்த விவகாரம் குறித்து பிண்டுவிடம் விசாரணை நடத்தினோம். ஆனால் தான் செய்ததற்கு வருத்தப்படுவதோ குற்ற உணர்ச்சியோ ஏதும் இல்லாமல் சர்வ சாதாரணமாக இருந்துள்ளார்.

எனினும் மேற்கொண்டு விசாரணை செய்த போது பிண்டு கூறியதை கேட்டு பொலிஸாரே அதிர்ச்சியில் உறைந்தனர். வீட்டுக்கு வீடு இதுபோல் பாலியல் குற்றங்கள் நடக்கத்தான் செய்யும் என்று சிறுமியை நம்ப வைத்ததாக பிண்டு கூறினார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.