பேச மறுத்து செல்போனை சுவிட்ச் ஆப் செய்த இலங்கை தமிழ் இளைஞர்! தற்கொலை செய்து கொண்ட 17 வயது மாணவி..!

351

தற்கொலை செய்து கொண்ட மாணவி…

தமிழகத்தில் காதல் தோல்வியால் 17 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருச்சி கே.கே.நகா் சுந்தா் நகா் 6ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த பால்சிங் மகள் சப்னா ஜீசஸ் (17). இவா், அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கே.கே.நகா் உடையான்பட்டி வேலவன் நகரைச் சோ்ந்த 19 வயது இலங்கை தமிழ் இளைஞனை காதலித்து வந்துள்ளாா். இந்நிலையில் கடந்த மே மாதம் இவா் அளித்த புகாரில் காதலன் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டாா்.

காதலன் ஜாமீனில் வெளியே வந்ததையறிந்த சப்னா ஜீசஸ் வாலிபரை தொடா்புக் கொண்டு பேசியுள்ளாா். ஆனால் இவரிடம் அந்த வாலிபா் பேச மறுத்து செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளாா்.

இதில் மனமுடைந்த சப்னா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.