பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் குழந்தை பிறந்த பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, அவர் அணிந்திருந்த ஆடை திரைப்படம் ஒன்றில் பேய் குழந்தை அணிந்திருந்த ஆடையை பிரதிபலிக்கிறது என சமூகவலைதளங்களில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியினருக்கு ஏப்ரல் 23 ஆம் திகதி ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு லூயிஸ் என பெயர் சூட்டியுள்ளனர்.
இந்நிலையில் குழந்தை பிறந்த பின்னர், தம்பதியினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அச்சந்திப்பின்போது கேட் மிடில்டன், சிவப்பு நிறத்தில் வெள்ளை நிற காலர் வைத்த கவுன் அணிந்திருந்தார். இந்த ஆடையை Jenny Peckham என்பவர் வடிவமைத்துள்ளார்.
இந்நிலையில், 1968 ஆம் ஆண்டு வெளியான Rosemary’s Baby என்ற திரைப்படத்தில் வரும் பேய்க்குழந்தையின் ஆடையை கேட் அணிந்துள்ளார் என டுவிட்டரில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Roman Polanski இயக்கப்பட்ட திரைப்படம் திகில் திரைப்படம் ஆகும். இதில் பேயினால் கற்பழிக்கப்படும் பெண் அதன் மூலம் குழந்தை பெற்றெடுக்கிறார்.
அந்த பேயானது சிவப்பு நிற ஆடையில் தான் அந்த திரைப்படத்தில் தோன்றியிருக்கும். ஏறக்குறைய கேட் மிடில்டன் ஆடை போன்று உள்ளது. இதனை உன்னிப்பாக கவனித்த டுவிட்டர்வாசிகள், கேட் மிடில்டன் Rosemary’s Baby-யின் ஆடையை அணிந்துள்ளார்.இது ஒரு பேயின் ஆடை என விமர்சனம் செய்துள்ளனர்.