பேருந்தை நிறுத்திய 21 வயது பெண்… அதிர்ந்துபோன டிரைவர் : பின் நேர்ந்த விபரீதம்!!

618

சென்னை….

சென்னை பாரிமுனையில் இருந்து இரவு நேரம் மாநகராட்சி பேருந்து ஒன்று புறப்பட்டது. பேருந்து பட்டாளம் ஸ்டாரன்ஸ் ரோடு வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது, பிளாட்பாரத்தில் பெண் ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.

அவருக்கு வயது 21 இருக்கும்.. பேருந்தை வருவதை பார்த்ததும் தனது கைகளை அசைத்து நிறுத்தினார். டிரைவரூம் பேருந்தை நிறுத்தினார்.

பேருந்தை நிறுத்தியதை கண்ட அந்த பெண்ணோ, பேருந்தை நோக்கி நடந்து வந்தார். ஆனால், பேருந்தில் ஏறாமல் கீழே கிடந்த கருங்கல்லை எடுத்து பேருந்து மீது எறிந்தார். இதில் பேருந்தின் முன் கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கியது.

இதனை கண்டு டிரைவர், கண்டக்டர், பயணிகள் அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஓட்டேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்த அந்த பெண்ணிடம் விசாரித்ததில், அந்த பெண்ணுக்கு வீடு எதுவும் இல்லை என்றும், அம்பத்தூர் ரயில்வே பிளாட்பாரத்தில் தான் எப்போதும் வசித்து வருவதும் தெரியவந்தது.

மேலும் பெண்ணின் பெயர் வேளாங்கண்ணி.. தண்ணீர் அடித்திருப்பதும் தெரிய வந்தது. போதையில் என்னன்னவோ உளறியது அடுத்து போலீசார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால், ஓட்டேரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.