பொய் சொல்லும் கமெராக்கள் :
இன்று சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரைக் குறிவைத்து ஏமாற்றிப் பிழைப்போர் பெருகிவிட்டார்கள். அதுவும் ஊரடங்கின்போது தங்களைப் பின்பற்றுவோரால் பெரும் வருமானம் பார்க்கும் ஒரு கூட்டம் அழகிகள் இருக்கிறார்கள்.
இப்போது பல அழகிகள் மேக் அப் இல்லாத தங்கள் புகைப்படங்களை வெளியிடும்போதுதான் அவர்களது சுயரூபம் மக்களுக்குத் தெரியவருகிறது.
சமீபத்தில் இதேபோல் ஒரு அழகி தான் ஒரு கோடீஸ்வரர் என்ற போலியான செய்தியை உலவவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், போட்டோக்களை எடிட் செய்யும் ஆப்களைக் கொண்டு தங்கள் உண்மையான உருவத்தை மாற்றி தங்களை அழகாகக் காட்டி ஏமாற்றும் பெண்களைக் குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
வெளியாகியுள்ள சில புகைப்படங்கள் எடிட் செய்வதற்கு முன்னும் பின்னும் இந்த அழகிகள் எப்படி இருப்பார்கள் என்பதைக் காட்டுகிறது.
இருந்தும் ஒரு கூட்டம் ஏமாந்துகொண்டுதான் இருக்கிறது… என்ன செய்வது, மக்களுக்கும் பொழுது போக வேண்டும், இந்த அழகிகளுக்கும் பிழைப்பு வேண்டும், தெரிந்தே ஏமாறவேண்டியதுதான்.