கேப்ரியல்லா..
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கேப்ரியல்லா. அப்போது மிகவும் சிறுமியாக இருந்தார். அதன்பின்னரும் சில நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
அதில் கிடைத்த புகழால் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்த வீட்டில் யாருடனும் மோதல், சண்டை , சச்சரவு இல்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என விளையாடி ரசிகர்களை கவர்ந்தார்.
சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதுதான் அவரின் ஆசை. ஆனால், அவருக்காக கதவுகள் திறக்கப்படவில்லை. எனவே, இருக்கவே இருக்கு நம்ம விஜய் டிவி என சீரியலில் நடிக்க துவங்கினார்.
தற்போது ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதிலும் இடம் பிடித்துள்ளார். ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய அழகான புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.
சில சமயம் கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார். இந்நிலையில், விஜய் டிவி விருது வழங்கும் விழாவில் கிளாமரான உடையில் அவர் கலந்து கொண்டார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.