மகனின் உண்டியலால் கோடீஸ்வரரான தந்தை : நடந்த சுவாஸ்ரசிய சம்பவம்!!

1377

கேரளா….

கேரளாவில் ஸ்ரீவரஹம் பகுதியைச் சேர்ந்த அனூப் என்பவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகின்றார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வரும் நிலையில், குடும்ப கஷ்டம் காரணமாக மலேசியாவிற்கு வேலைக்கு சேர திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் மகன் உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை எடுத்து கடந்த சனிக்கிழமை லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். இவர் வாங்கிய டிக்கெட்டிற்கு ரூ.25 கோடி ரூபாய் ஓணம் பம்பர் பரிசு விழுந்துள்ளது.

இவரது வெற்றிக்கான டிக்கெட் TJ 750605 என்பதாகும். குறித்த டிக்கெட்டினை இவர் இரண்டாவது தான் தேர்வு செய்து வாங்கியுள்ளாராம். முதலில் வேறு டிக்கெட் எடுத்ததாகவும், அதன் பின்பு இரண்டாவதாக மாற்றம் செய்த டிக்கெட்டிற்கே லாட்டரி விழுந்துள்ளதாக கூறியுள்ளார்.

கடந்த 22 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கிவரும் இவர், அவ்வப்போது 100, 200, முதல் 5000 வரை பரிசு பெற்றுள்ளார். ஆனால் இந்த முறை எதிர்பார்க்காத வெற்றியினை பெற்று 25 கோடி வென்றுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் டிவியில் லாட்டரி முடிவுகளைப் பார்க்கவில்லை. இருப்பினும், எனது தொலைபேசியைச் சரிபார்த்தபோது, ​​நான் வெற்றி பெற்றதைக் கண்டேன். என்னால் நம்ப முடியாமல் என் மனைவியிடம் காட்டிய பின்பு, அவர் தான் வெற்றி எண் என்பதை உறுதி செய்ததாக கூறியுள்ளார்.

வரி பிடித்தம் செய்த பின்பு ரூ.15 கோடியை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் இவர், தனது கடனை அடைத்துவிட்டு, சொந்தமாக வீடு மற்றும் கடை ஒன்றினை வைத்து வாழ்வதாகவும் கூறியுள்ளார்.