தன்னை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதை தவிர்க்கும் வகையில் 92 வயதாகும் அமெரிக்க மூதாட்டி ஒருவர், 72 வயதான தனது மகனை சுட்டுக்கொன்ற சம்பவம் அமெரிக்காவில் நடந்தேறியுள்ளது.
அன்னா மே பிளஸ்ஸிங் என்ற அந்த மூதாட்டி, தனது மகன் தன்னை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதற்கு திட்டமிட்டிருந்ததை அடுத்து அவரை கொலை செய்துவிட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
தனது மகன் மற்றும் அவரது பெண் தோழியுடன் அரிசோனாவில் வசித்து வந்த வீட்டிலிருந்து வெளியே அழைத்துவரப்பட்ட அந்த மூதாட்டி,”எனது வாழ்க்கையை நீ எடுத்துக்கொண்டாய், அதனால் உன்னுடையதை நான் எடுக்கிறேன்” என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அந்த மூதாட்டியின் மீது ஆயுள் தண்டனை அல்லது தூக்குத் தண்டனை விதிக்கக்கூடிய பிரிவு, மோசமான தாக்குதல் மற்றும் கடத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் பிணையில் விடுவிக்கப்படுவதற்கான தொகையாக 5,00,000 டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.