மகனை அடித்துக்கொலை செய்து உடலை சாக்கில் கட்டி சைக்கிளில் எடுத்துச்சென்ற பெற்றோர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

600

மதுரை…

குடித்துவிட்டு தினமும் ரகளையில் ஈடுபட்டு வந்த மகனை பெற்றோர் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஆரப்பாளை மறவர் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் இவரது மனைவி கிருஷ்ணவேணி இவர்களுக்கு 42 வயதான மணிமாறன் என்ற மகன் உள்ளார். மணிமாறன் திருமணம் முடிந்து 3 குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் தொடர் மதுப்பழக்கத்தால் அவரது மனைவி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் தனது பெற்றோருடன் வசித்துவந்துள்ளார் மணிமாறன்.அவப்போது பெற்றோருடன் மது போதையில் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவும் வழக்கம் போல குடித்து விட்டு வந்து பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மணிமாறனை அடித்துக்கொலை செய்துள்ளனர்.

பின்னர் உடலை சாக்கில் கட்டி சைக்கிளில் எடுத்து சென்று,ஆரப்பாளையம் வைகை ஆற்று பகுதியில் போட்டு எரித்துள்ளனர். பின்னர் ஒன்றும் தெரியாதவர்கள் போல வீட்டிற்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் போலீசாருக்கு அடையாளம் தெரியாத இளைஞரின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்ட போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது முருகேசன் மற்றும் கிருஷ்ணவேணி உடலை சாக்கில் கட்டி சைக்கிளில் எடுத்துச்சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. இதையடுத்து மகனை எரித்துக்கொன்ற பெற்றோரை கைது செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெற்ற மகனை பெற்றோர் அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.