மகனை தேர்வுக்கு அனுப்பிவிட்டு வெளியே வந்த தந்தை… காத்திருந்த ஆச்சரியம்! உலகத்துல இப்படியொரு தந்தையா?

288

10ம் வகுப்பு தேர்வு…..

தனது மகனை 10ம் வகுப்பு தே ர்வு எழுதுவதற்கு தந்தை ஒருவர் 106கி.மீற்றர் சைக்கிளில் அழைத்து வந்துள்ளது ஆ ச் சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் தார் மா வ ட்டம் மனவார் தேசில் என்ற கிராமத்தைச் சேர்ந்த கூ லி தொ ழி லாளி சோபாராம்.

இவர் தனது மகன் அசீஸ் கணிதம் மற்றும் சமூ அறிவியல் தேர்வு எழுதுவதற்கு சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். துணைத் தேர்வு எழுதாமல் மகனின் வா ழ்க்கை கெ ட் டுவி டக்கூடாது என்பதற்காக சைக்கிளில் அவ்வளவு தூரம் கூ ட்டிச் செ ன்றதாக அவர் கூறியுள்ளார்.

ஒரு நண்பரிடம் 500 ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு தந்தையும் மகனும் சைக்கிள் பயணத்தைத் தொடங்கினர். இரவில் மட்டும் கோயில்கள் போன்ற இடங்களில் தங்கிக்கொண்டார்கள்.

தேர்வு மையம் செல்லும் வழியில் தென்பட்ட ஊர்களில் மக்கள் உணவும் தங்குமிடமும் கொடுத்து அவர்களை உபசரித்துள்ளனர்.

தேர்வு முடித்துவிட்டு வெளியே வந்த மாணவர் அசீஸுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. தந்தையையும், மகனையும் வரவேற்க அரசு அதிகாரிகள் காத்திருந்தனர்.

பின்னர் இருவருக்கும் உணவு கொடுத்த அதிகாரிகள் ஊருக்குச் செல்ல போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து வழியனுப்பி வைத்தனர். இந்த பாசக்கார தந்தையை பல்வேறு தரப்பினரும் வெ குவாக பாராட்டி வருகின்றனர்.