மகன்களுக்கு விஷம் கொடுத்து கொன்று பெண் தற்கொலை : அதிர்ந்து போன கிராமமக்கள்!!

1140

மதுரை…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அ.கோவில்பட்டியை சேர்ந்தவர் அய்யனார் (40). விவசாய கூலி வேலை பார்க்கிறார். இவரது மனைவி தனலட்சுமி (38). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஹரிகிருஷ்ணன் (14) அருகிலுள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பும், குபேந்திரகிருஷ்ணன் (12). ஏழாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்துள்ளது. அதனால் விரக்தியுற்ற தனலட்சுமி நேற்று இரவு கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் தனது இரு மகன்களுக்கும் விஷம் கொடுத்து தானும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

நள்ளிரவில் வீட்டிற்கு வந்த அய்யனார் கதவை தட்டிய போது யாரும் திறக்காதால் சந்தேகம் அடைந்தவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மூன்று பேரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மேலும், அய்யனார் மீதம் இருந்த விஷத்தை தானுமருந்தி தற்கொலைக்கு முயன்றார். இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அலங்காநல்லூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அய்யனார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.