மகளுடன் சேர்த்து வேறு 5 பெண்களுக்கு ஒரே மேடையில் திருமணம் செய்துவைத்த தந்தை : நகைகளை அள்ளி கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம்!!

303

கேரளா…

இந்தியாவில் தந்தை ஒருவர் தனது மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் நடத்துவதை தவிர்த்ததன் மூலம் மேலும் 5 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

கேரளாவில் தான் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கன்னூரில் சலீம் – ரூபினா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களின் மகள் ரமீசாவுடன் சேர்ந்து மேலும் 5 பெண்களுக்கு சலீம் திருமணம் செய்து வைத்துள்ளார்.

அதன்படி வரதட்சணை எதுவும் கேட்காத மாப்பிள்ளை தான் தனது பெண்ணுக்கு கணவனாக வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த சலீம் அந்த மாப்பிள்ளையை தேடி கண்டுபிடித்திருக்கிறார்.

மேலும் மகள் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தாமல் தான் சேமித்து வைத்த பணத்தில் மேலும் ஐந்து பெண்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார் சலீம்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த 5 பெண்களை தேர்வு செய்து இத்திருமணத்தை சலீம் நடத்தி வைத்துள்ளார். 6 பேரில் இரண்டு பெண்கள் இந்து பெண்கள் மற்றும் நால்வர் இஸ்லாமியர்கள் ஆவார்கள்.

அதன்படி இரண்டு திருமணங்கள் இந்து முறைப்படியும் மூன்று திருமணங்கள் இஸ்லாமிய முறைப்படியும் நடந்தன.

இதனை தொடர்ந்து தன் மகள் உட்பட 6 மணப்பெண்களுக்கும் தலா 10 சவரன் நகையை சலீம் வழங்கினார், 6 பேருமே ஒரே மாதிரியான புடவையை அணிந்திருந்தனர். சலீமின் இந்த மனிதநேயமிக்க செயலுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.