கர்நாடக….
கர்நாடக மாநிலத்தில் ஆணவக்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. தற்போது அங்கு நடந்துள்ள ஆணவக்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்திலுள்ள குடாதினி என்ற நகரத்தை சேர்ந்தவர் ஓம்கார் கவுடா.
இவரின் கல்லூரி படித்துவரு மகள் மாற்றுசமுக இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த தகவல் ஓம்காருக்கு தெரியவந்துள்ளது. அதன் பின்னர் தனது மகளிடம் காதலை கைவிடும்படி கூறியுள்ளார். ஆனால் தந்தையின் சொல்லை கேட்காமல் அவர் மகள் தொடர்ந்து அந்த இளைஞருடன் பழகி வந்துள்ளார்.
இதன் காரணமாக மகள் மேல் கடும் ஆத்திரத்தில் இருந்த ஓம்கார் தனது மகளை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி மகளை அழைத்துக்கொண்டு சினிமாவுக்குச் சென்றுள்ளார். பின்னர் சினிமா முடிந்த நிலையில் அருகில் இருக்கும் கோவிலுக்கு மகளுடன் சென்று மகள் அணிந்திருந்த தங்கநகைகளை கழட்டி தரக்கூறியுள்ளார்.
அதன்படி மகள் தந்ததும் கால்வாய்க்கு சென்று விட்டு அப்படியே வீட்டுக்கு செல்லலாம் என்று கூறியுள்ளார். தந்தையின் பேச்சை நம்பிய மகளும் கால்வாய்க்கு மகளோடு சென்றபோது மகளை கால்வாயில் தள்ளிவிட்டுள்ளார். இதில் அவரின் மகள் கால்வாயில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மகள் இறந்தபின்னர் ஓம்கார் அங்கிருந்து தப்பி திருப்பதிக்கு சென்றுள்ளார். மகளும், கணவரும் வீடு திரும்பாத நிலையில்,ஓம்காரின் மனைவி இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அங்கு மாலையில் ஓம்கார் வீட்டுக்கு திரும்பிய நிலையில், இந்த சம்பவம் குறித்து அவரிடம் போலிஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது மகளை ஆணவக்கொலை செய்தது குறித்து உண்மையை தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலிஸார் ஓம்கரை கைது செய்தனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.