திருப்பத்தூர்…..
திருப்பத்தூர் மாவட்டம் புத்தாகரம் பகுதியில் உள்ள காலனியில் வசிப்பவர் கோடீஸ்வரன் (42). இவரது மனைவி தாட்சாயணி (37). இவர்களுக்கு பள்ளி செல்லும் வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், கூலி வேலை செய்து வரும் கோடீஸ்வரன் பல நாட்களாக தன்னுடைய மனைவி தாட்சாயணியை தன்னுடைய மகள் கண் முன்னாலேயே பாலியல் உறவுக்கு அழைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
இதுகுறித்து மகள் தந்தையை தட்டிக் கேட்ட போது ”உன்னுடைய அம்மா வரவில்லை என்றால் நீ வா” என்று கூறி மகள் மீதும் பாலியல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளார். இதனால் தந்தையிடமிருந்து பாதுகாப்பு கருதி மகள் மற்றும் அவரது தாய் இருவரும் அதே பகுதியில் அருகில் இருக்கும் அவருடைய மாமா வீட்டுக்கு சென்று வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் உறவுக்காரர்கள் முன்னிலையில் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி மீண்டும் தாட்சாயணியும் அவரது மகளும் கோடிஸ்வரன் வீட்டிற்கு வந்துள்ளனர்.
ஆனால், வழக்கம்போல மீண்டும் கோடீஸ்வரன் தன்னுடைய வக்கிரபுத்தியைக் காட்ட ஆரம்பித்தவுடன் மகள் வாய்த் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது மகளின் அந்தரங்க உறுப்புகளை அத்துமீறி தொட்டு அடித்து மனைவி மகள் இருவரையும் கோடீஸ்வரன் துன்பறுத்தியுள்ளார். இதனால் உடலளவும், உள்ளளவும் பாதிக்கப்பட்ட தாய், மகள் இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து தந்தையின் தொடரும் பாலியல் அச்சுறுத்தலால் மனமுடைந்த மகள் தாயை அழைத்துக்கொண்டு திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் மகளிர் காவல் ஆய்வாளர் கோடீஸ்வரனை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.
பெற்ற மகள் முன்னிலையில் மனைவியுடன் சேர்ந்து இருக்க நினைத்தது மட்டுமின்றி மகள் மீதே வக்கிர பார்வையை செலுத்திய காமுக தந்தையின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.