காதலுக்கு வயதில்லை என்று படங்களில் நடிகர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். அந்த வசனத்திற்கு தற்போது உதாரணம் என்றால் மிலின்ட்-அன்கிதா ஜோடியை கூறலாம்.
52 வயதான நடிகர் மிலின்ட் 27 வயதான அன்கிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.இவர்களது திருமணத்திற்கு பலர் வாழ்த்தினாலும் இந்த வயதில் நடிகருக்கு இப்படி ஒரு திருமணம் தேவையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் புதிதாக திருமணம் செய்துகொண்ட இவர்கள் முதன் முதலாக செடி நடும் வேலையை செய்துள்ளனர்.நடிகரின் இந்த செயலை பார்த்தவர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.