பெண் போலீஸ்காரர் மகளை பொலிஸ் துணை கமிஷனரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மஹாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத்தில் பொலிஸ் துணை கமிஷனராக இருப்பவர் ராகுல் ஸ்ரீராம். இவருக்கும் அங்குள்ள பெண் பொலிஸ் ஒருவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து அப்பெண் போலீசின் 23 வயது மகளும் ராகுலுடன் பேசி வந்துள்ளார். அம்மாவுக்கு அறிமுகமான நபர் என்பதால் அவர் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவருக்கு வேலை வாங்கி தருவதாக ராகுல் கூறவும், வேலை சம்பந்தமாக அடிக்கடி பேசியிருக்கின்றனர்.இந்நிலையில் இப்பெண்ணை கடந்த பிப்ரவரி மாதத்தில் மிரட்டி பாலியல் துஷ்ப்ரயோகம் செய்துள்ளார். இதனை ஒருவரிடமும் சொல்ல கூடாது என்று மிரட்டிய ராகுல் கடந்த ஜூன் 21ஆம் தேதி வரை அவரை பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த விடயம் அந்த பெண் போலீசிற்கு தெரியவந்ததும் அவர் உடனடியாக துணை கமிஷனர் ராகுல் மீது புகார் அளித்துள்ளார். அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதை அறிந்த ராகுல் வேலைக்கு விடுப்பு எடுத்து கொண்டு போய்விட்டதாக கூறப்படுகிறது.விசாரணை மேலும் தொடர்கிறது.