மணப்பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த மாப்பிள்ளை : காவல் நிலையத்தில் கம்பி எண்ணும் அவலம்!! நடந்தது என்ன?

427

பெரம்பலூர்…

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள கிழுமத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்; இவரது மகள் 22 வயதான பூவழகி.

இவர் தனது பெற்றோருடன் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

அதில் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் தன்னை திருமணம் செய்து மோசடி செய்து விட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.

பென்னகோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் 25 வயதான பால்ராசு. இவருக்கும், பூவழகிக்கும் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, 5 சவரன் தங்க நகைகள்,

வீட்டிற்கு தேவையான சீர்வரிசை பொருட்களை பெண் வீட்டார் கொடுத்துள்ளனர். பெண்ணின் பெற்றோர் சிறிது காலம் கழித்து பத்து சவரன் தங்க நகையும், இருசக்கர வாகனம் வாங்குவதற்காக 1 லட்சம் ரூபாய் பணமும் தருவதாக கூறியிருந்தனர்.

திருமணம் முடிந்து 2 மாதங்கள் பென்னகோணம் கிராமத்தில் உள்ள பால்ராசு வீட்டில் இருவரும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், பால்ராசு தனது செல்போனில் ஏராளமான பெண்களுடன் தான் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்களை பூவழகியிடம் காண்பித்துள்ளார்.

அவர்கள் குறித்து பூவழகி கேட்டதற்கு, தான் இதற்கு முன் பல பெண்களை நகை பணத்திற்கு ஆசைப்பட்டு திருமணம் செய்திருப்பதாகவும், உன்னை நல்ல முறையில் பார்த்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.