மணமேடையில் தாலி கட்டப்போகும் கடைசி நேரத்தில் வேறு பெண்ணிற்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!!

376

இந்தியாவில்..

மணமேடையில்தாலி கட்டும் நேரம் மணமகன் வேறு பெண்ணிற்கு தாலி கட்டிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. புதுப்பேட்டை திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிகை சோனியா அகர்வாலின் திருமணத்திற்கு சென்று அங்கு மாப்பிள்ளைக்கு தாலி எடுத்துக்கொடுக்கும் போது, தானோ அந்த தாலியை பெண்ணிற்கு கட்டி விடுவார்.

இந்த காட்சி எல்லோருக்கும் தெரியும். படத்தின் இந்த காட்சியை யாராலும் மறக்க முடியாது. இப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் மணமகன், மணமேடையில் மணமகளுக்கு தாலி கட்டதயாரானார்.

விருந்தினர்கள் எல்லோரும் அமர்ந்து திருமணத்தை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தீடீரென மாப்பிள்ளை மணப்பெண் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிற்கு தாலி கட்டி விட்டார்.

இதை கண்டதும் விருந்தினர்கள் எல்லாரும் பதறிப்போய் எழுந்து நிற்கின்றனர். இப்படியாக ஓடும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது பலர் இந்த வீடியோவை பகிர்ந்த புதுப்பேட்டை திரைப்பட காட்சியுடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.

இந்த வீடியோவை பகிரும் சிலர் இந்த வீடியோ ஒரு சீரியல் சூட்டிங் வீடியோ என்று குறிப்பிட்டுள்ளனர். சிலர் இது உண்மையாக நடந்த திருமணம் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

உண்மையில் இந்த சம்பவம் நடந்ததா இல்லை சினிமா சூட்டிங்கா, எங்கு நடந்தது? இது யார் திருமணம் என எந்த விபரமும் தெரியவில்லை. ஆனால் பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.