திருமணமான 3 மாதத்தில் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு : குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

302

திருவள்ளுர்…

திருவள்ளுர் மாவட்டம் ஆவடி சேக்காடு டிரைவர்ஸ் காலனி 4 வது தெருவை சேர்ந்தவர் அகிலன் (வயது 27) . இவருக்கும் வியாசர்பாடியை சேர்ந்த உறவினர் பெண்ணான ரோனிஷா (வயது 22) என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

ரோனிஷா அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகு ஆவடியில் உள்ள தனது கணவர் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் வீட்டில் இருந்தவர்கள் பணிக்கு சென்ற நிலையில் ரோனிஷா மட்டும் தனியாக இருந்துள்ளார்.

மதியம் ரோனிஷாவின் நாத்தனார் சிலம்பரசி வீட்டின் கீழ்தளத்துக்கு வந்துபார்வையிட்ட போது இளம்பெண் வீட்டின் உள்ள உள்அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர் தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆவடி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஆவடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரோனிஷாவிற்கு திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை.

இதனால், திருமணமான நாள் முதல் விரக்தியில் இருந்து தெரியவந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு, கல்லூரிக்கு செல்லும் போது தோழிகள் கேலி, கிண்டல் செய்து உள்ளனர்.

இதுகுறித்து தனது அம்மா சசிரேக்காவிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார். இந்நிலையில் தான் மாமியார் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ரோனிஷா தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்தது. மேலும், இளம்பெண்ணுக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆகிறதால், திருவள்ளூர் ஆர்.டி.ஓவும் விசாரணை நடத்தி வருகின்றார்.