மனித முகத்துடன் வலம்வரும் நாய்க்குட்டி : வைரலாகும் புகைப்படங்கள்!!

1002

 

மனித முகத்தை போன்ற தோற்றத்தை கொண்ட நாய்க்குட்டியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அந்நாயின் கண்கள் பார்ப்பதற்கு மனிதர்களுடைய கண்களை போன்றே உள்ளது, அதுமட்டுமின்றி வாயும் அப்படித்தான் இருக்கிறது.

முதலில் இதை பதிவேற்றியவுடன், சந்தேகமடைந்த நெட்டிசன்கள் போட்டோஷாப் வேலையாக இருக்கும் என கூறினர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த நாயின் உரிமையாளர் Michelle, எனக்கு போட்டோஷாப் பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது.

நான் எனது நாயின் புகைப்படத்தை கடந்த டிசம்பர் மாதம் சமூகவளைதளத்தில் பதிவேற்றினேன், அது தற்போது வைரலாக பரவி வருகிறது என தெரிவித்துள்ளார்.

பலரும் வினோதமாக தெரியும் இந்த நாயையும் பிரபலமானவர்களின் முகத்தையும் ஒப்பிட்டு இணையத்தில் பதிவு செய்து வருவது வைரலாகியுள்ளது.