மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக எண்ணிய கணவன்: ஊர் முன்னால் கொடுத்த அதிர்ச்சி தண்டனை!!

1000

மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட கணவன் அவருக்கு மொட்டை அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள மஞ்சிகலப்படு கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாச ராவ். இவர் மனைவி பாக்யலட்சுமி. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் பாக்யலட்சுமிக்கு வேறு ஆணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக ஸ்ரீனிவாச ராவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இரு தினங்களுக்கு முன்னர் தனது தந்தையுடன் சேர்ந்து பாக்யலட்சுமிக்கு மொட்டை அடித்த ஸ்ரீனிவாச ராவ், அவர் முகத்தில் கருப்பு மையை பூசியுள்ளார்.

பின்னர் கிராமம் முழுவதும் மனைவியை நடக்கவைத்த ஸ்ரீனிவாசராவ், இனி இது போன்ற தவறு செய்ய மாட்டேன் என பாக்யலட்சுமியை கூறவைத்துள்ளார்.

இதையெல்லாம் வேடிக்கை பார்த்த கிராம மக்கள் யாரும் பாக்யலட்சுமிக்கு உதவாத நிலையில் சிலர் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் பாக்யலட்சுமியிடம் விசாரணை நடத்தினார்கள்.

இதில் சம்மந்தப்பட்ட ஸ்ரீனிவாசராவ் மற்றும் அவர் தந்தை மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.