மனைவியின் செல்லப் பெயரை பக்கத்து வீட்டு நாய்க்கு வைத்ததால் நடந்த கொடூரம்!!

521

குஜராத்….

மனைவிக்கு ஆசையாக வைத்த செல்லப்பெயரை பக்கத்து வீட்டு நாய்க்கும் வைத்து கூப்பிட்டு வந்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த நபர் அந்த பக்கத்து வீட்டு பெண்ணுக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது .

அம்மாநிலத்தில் பாவ் நகரில் வசித்து வருகிறார் நீத்தாபென்(35). இவர் ஒரு நாய்க்குட்டி வளர்த்து வருகிறார். அந்த நாய்க்குட்டிக்கு சோனு என்று பெயர் வைத்து அழைத்து வருகிறார்.

இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சுரபாய்க்கு இது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் தனது மனைவியை சோனு என்றுதான் செல்லமாக அழைத்து வந்திருக்கிறார்.

இதனால் நீதாபென்னிடம் சண்டைக்கு சென்றிருக்கிறார். நாயை சோனு என்று அழைக்கக்கூடாது என்று அவர் கூறியிருக்கிறார்.

இதில் என்ன இருக்கிறது என் வீட்டு நாய்க்கு நான் செல்லமாக பெயர் வைக்கிறேன். இந்த பெயரை வைக்கக்கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார் என்று அவர் கேட்டிருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது.

இந்த நிலையில் நீதாபென் கணவரும் இரண்டு குழந்தைகளும் வீட்டில் இல்லாத நேரத்தில் , தனது ஆட்கள் 5 பேரை அழைத்துக்கொண்டு நீதாபென் வீட்டுக்குள் சென்றிருக்கிறார் சுரபாய். நாய்க்கு சோனு என்று பெயர் வைக்கக்கூடாது என்று வாக்குவாதம் செய்து இருக்கிறார்.

வாக்குவாதம் நடந்தபோது திட்டமிட்டு எடுத்துச் சென்றிருந்த மண்ணெண்ணெய்யை நீதாபென் மீது ஊற்றி தீ வைத்துள்ளனர். இதில் துடிதுடிக்க அலறியிருக்கிறார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து உள்ளனர்.

அந்த நேரத்தில் வெளியே சென்றிருந்த கணவரும், குழந்தைகளும் வந்திருக்கிறார்கள். உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்திருக்கிறார்கள் . இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

ஆனால் இதுவரைக்கும் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த கொலைவெறி தாக்குதல் ஏற்படாமல் இருப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.