மனைவியின் முன்னாள் காதலனுக்கு கணவன் செய்த வெறிச்செயல் : அலறித்துடித்த அவலம்!!

291

திண்டுக்கல்…

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு மலையப்பன்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிதுரை (34). இவர் அதே பகுதியில் வசிக்கும் பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால், பெண்ணின் வீட்டார் சாமிதுரையை நிராகரித்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மருதுவுக்கு பெண்ணை திருமணம் செய்துகொடுக்க முடிவெடுத்து ஏற்பாடு செய்தனர்.

காதல் கை கூடாததால் சாமிதுரை வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். அதேபோல, அந்த பெண்ணுடன் மருதுவுக்கு திருமணம் முடிந்துள்ளது. இருப்பினும் பழைய பகையினால் சாமிதுரைக்கும், மருதுவுக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இரு தரப்பினரும் அடிக்கடி மோதிகொண்டு காவல் நிலையம் வரை பஞ்சாயத்து இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று இருத்தரப்பினரையும் வத்தலக்குண்டு காவல் நிலையம் வரவழைத்து போலீசார் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். அதன் பிறகு வத்தலக்குண்டு பகுதியில் உள்ள பேக்கரியில் பலகாரம் வாங்கிகொண்டிருந்த சாமிதுரையை மருது,

அவரது உறவினர் உதயகுமார் ஆகியோர் அரிவாளுடன் வந்து வெட்டத்தொடங்கினர். அதை சற்றும் எதிர்பார்க்காத சாமிதுரை அவர்களிடம் இருந்து தப்பிக்க கடுமையாக போராடி பின்னர் கடையை விட்டு வெளியே ஒடி வந்தார்.

அப்போது கால் இடறி கீழே விழுந்த சாமிதுரையை இருவரும் சேர்ந்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து சாவகாசமாக நடந்து சென்றனர். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் அச்சத்துடன் வேடிக்கை பார்த்துகொண்டிருந்தனர்.

சம்பவம் அறிந்து வந்த வத்தலக்குண்டு போலீசார் பிரேதத்தை கைப்பற்றி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததை தொடர்ந்து,

கொலை சம்பவம் முழுவதும் பேக்கரி கடையின் சிசிடிவியில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து கொலை செய்த மருது, அவரது உறவினர் உதயகுமார் இருவரையும் கைது செய்தனர்.

பட்டபகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.