மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

464

திருவள்ளூர்…

திருவள்ளூர் மாவட்டம் புழல் எம்ஜிஆர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் இளங்கோவன்(31). இவர் எலெக்ட்ரிசின் ஆக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து குழந்தைகளுடன் புழல் கண்ணப்ப சாமி நகரில் வசித்து வருகிறார்..

இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பாரிமுனையில் எலக்ட்ரிக் வேலை செய்வதற்காக சென்றபோது சென்னை புளியந்தோப்பு சென்ற வெண்ணிலா இவர் பாரிமுனையில் உள்ள வீடுகளில் வேலை செய்து வந்தவர். அப்போது வெண்ணிலாவுக்கும் இளங்கோவனுக்கும் காதலாக மாறி இருவரும் எம்ஜிஆர் நகரில் உள்ள இரண்டாவது தெருவில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் வெண்ணிலா தனது மகன், மகள்களை பார்ப்பதற்காக செல்ல வேண்டுமென்று நேற்று இளங்கோவனிடம் சொல்லியுள்ளார். இதற்கு இளங்கோவனுக்கும் வெண்ணிலாவுக்கும் இடையோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனை இளங்கோவின் தாத்தா தமிழ்தாசன் இருவரிடம் சமரசம் மேற்கொண்டபோது திடீரென வீட்டில் இருந்த கத்தியை எடுத்து இளங்கோவன் வெண்ணிலாவை கழுத்தில் சரமாரியாக வெட்டி விட்டு புழல் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

புழல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெண்ணிலாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து புழல் போலீசார் இளங்கோவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.