மனைவியை கத்தியால் குத்தி கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த கொடூர கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

422

கன்னியாகுமரி….

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் செட்டித்தெருவை சேர்ந்தவர் ஜோஸ் கான் பியர். வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர் கடந்த ஆண்டு சொந்த ஊர் திரும்பினார்.

நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து மனைவி வனஜா மற்றும் இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரண்டு பெண் குழந்தைகளும் பள்ளிக்கு சென்ற நிலையில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணவன் ஜோஸ் கான்பியர் மனைவி வனஜாவை கத்தியால் குத்தி கொலை செய்து கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே பள்ளியில் இருந்து வீடு திரும்பிய குழந்தைகள் தாய் எங்கே என கேட்டு அழுதுள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரின் கைக்கால்களை கட்டிபோட்டு வாயில் துணியை வைத்து ஒரு அறையில் அடைத்துள்ளார் அந்த கொடூரன்.

தந்தையின் கட்டுப்பாட்டை மீறி மூத்த மகள் தப்பித்து வெளியே வந்த நிலையில், தான் செய்த கொலை சம்பவம் வெளியே தெரிந்துவிடும் என்று பயந்து ஜோஸ் கான் பியர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் இரு பிள்ளைகளையும் அங்கிருந்து மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மனைவி மீதான சந்தேகத்தால் இந்த கொலை நடைப்பெற்றிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.