மனைவியை கொன்றுவிட்டு ஜெயிலுக்கு போன தந்தை… அனாதையான ஒன்றரை வயது குழந்தை : நேர்ந்த பரிதாபம்!!

357

நெல்லை…

நெல்லை மாவட்டம் திருக்குருங்குடி அருகே கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், தனது ஒன்றரை வயது குழந்தையின் கண் முன்னே மனைவியை வெட்டி கொன்று புதைத்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் திருக்குருங்குடி அருகே கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், தனது ஒன்றரை வயது குழந்தையின் கண் முன்னே மனைவியை வெட்டி கொன்று புதைத்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் திருக்குருங்குடி கீழரத வீதி பகுதியை சேர்ந்த பிரேமா என்பவரும் அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டாரும் இவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் தனி குடித்தனம் வாழ்னஹ்ட் வந்த இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில் ராணுவ வீரராக பணிபுரிந்து வரும் மாரியப்பன் சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இதனிடையே மனைவி பிரேமா மற்றும் மாரியப்பன் இடையே அடிக்கடி குடும்ப விஷயம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திருநெல்வேலியிலிருந்து வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிவிட்டு குடும்பமாக இருசக்கர வாகனத்தில் திருக்குறுங்குடி நோக்கி வந்துள்ளனர்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்துக்கொண்டிருந்த போது, இருவருக்கும் இடையே மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த மாரியப்பன் திருக்குறுங்குடி பெரிய குளத்திற்குள் பிரேமாவை தரதரவென்று இழுத்து சென்று குழந்தை கண் முன்னே அடித்து கொலை செய்து மண்ணில் புதைத்து உள்ளார்.

இந்நிலையில் நேற்று திருக்குறுங்குடி கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று தன் மனைவியை அடித்து கொலை செய்து குளத்தில் புதைத்து விட்டதாக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர் அங்கு வந்த திருக்குறுங்குடி போலீசார், குளத்தில் புதைக்கப்பட்டிருந்த பிரேமாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொடூர கொலையை அரங்கேற்றிய கணவர் மாரியப்பனை காவல்துறையினர் கைது செய்தனர்.

இரு வீட்டு பெற்றோர்களும் அனுமதியின்றி திருமணம் செய்து கொண்டதால், ஒன்றரை வயது குழந்தை தற்போது ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குழந்தையை ,பிரேமாவின் பெற்றோர்களும் மாரியப்பனின் பெற்றோர்களும் பெற்றுக்கொள்ளவில்லை.

இதனால் குழந்தையை காவலர்கள் திருக்குறுங்குடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் சிறுமியை காப்பகத்தில் சேர்ப்பதற்கு போலீசார் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். ஆத்திரத்தில் கணவன் செய்த கொலையால் ஆதரவற்ற நிலையில் நிற்கும் குழந்தையின் நிலைமை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.