மனைவியை தவிக்கவிட்டு கல்லூரி மாணவியுடன் காதல் : விரக்தியடைந்த பெண்ணின் சகோதரனால் நேர்ந்த விபரீதம்!!

274

ஒண்டிப்புதூர்…

ஒண்டிப்புதூர்பகுதியில்  வருபவர் அருண் என்கின்ற கார்த்தி. கோவை மாநகராட்சியில் வாகன ஓட்டுனராக உள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் கார்த்தி வீட்டின் அருகில் இருந்த ஒரு கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது சரண்யா மற்றும் கல்லூரி மாணவியின் வீட்டாருக்கு தெரிய வரவே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அறிந்த கல்லூரி மாணவியின் பெற்றோர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்தனது விட்டு காலி செய்துகொண்டு பட்டணம் பகுதிக்கு வீட்டை மாற்றி குடிவந்துள்ளனர்.

ஒரு மாதமாக சரண்யாவிற்கு தெரியாமல் கார்த்தி ரகசியமாக சென்று கல்லூரி மாணவியைச்சந்தித்து வந்துள்ளார். தொடர்ந்து காதலியுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னையும், தனது குழந்தைகளையும் கவனிப்பதில்லை என சரண்யா ஏற்கனவே சிங்காநல்லூர் காவல் நிலையத்தில்புகார் அளித்துள்ளார்.

இருந்தும் திருந்தாக தனது கணவனை கையும் களவுமாக பிடிக்க நேற்று சரண்யா, தனது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு பட்டணத்தில்உள்ள கல்லூரி மாணவி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கார்த்தி அந்த கல்லூரி மாணவி வீட்டில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரண்யாவின் குடும்பத்தினர் கார்த்தியையும், கல்லூரி மாணவியையும் அடித்து உதைத்து கார்த்தியை அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் வீடு புகுந்து தனது மகளைத் நாக்கியதாக கல்லூரி மாணவியின் தந்தை ஆறுமுகம் சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கார்த்திக்கையும்,

கல்லூரி மாணவியின் குடும்பத்தினரையும் அழைத்து நேற்று விசாரித்தனர். இரு குடும்பத்தினரையும் சிறிது நேரம் வெளியில் இருக்க சொல்லி உள்ளனர்.அப்போது காவல் நிலைய வாசலில் நின்றிருந்த கல்லூரி மாணவியின் தம்பி  16 வயதான பள்ளி மாணவன் ஆத்திரத்துடன் கார்த்திக்கை் தாக்க முயன்றுள்ளார்.

தாக்குதலில் இருந்து தப்பிக்க கார்த்தி பள்ளி மாணவனை திருப்பி தாக்கியுள்ளார். இருவரும் ஒருவருக்கொருவர் கட்டிப்புரண்டு சண்டையிட்டு அருகிலிருந்த கல்லை எடுத்து தாக்கிக் கொண்டனர்.

அப்போது வேறு ஒரு வழக்கு விசாரணைக்காக வந்த தென்னம்பாளையத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவர் தடுத்து இருவரையும் விலக்கியுள்ளார். அப்போது அவருக்கும் அடி விழுந்தது. உடனடியாக காவ ல்நிலையத்திலிருந்த போலீசார் இருவரையும் காவல் நிலையத்தினுள் அழைத்துச் சென்று எச்சரித்தனர்.

இந்நிலையில் தகராறைத்  தடுக்கச் சென்ற தன்னைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கார்த்தி சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் வழக்கு பணிவு செய்த சூலூர் போலீசார் மாநகராட்சி வாகன ஓட்டுனர் கார்த்தி மற்றும் பள்ளி மாணவன் என இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கார்த்திக்கை சிறையிலும் பள்ளி மாணனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைத்தனர்.