மனைவியை துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர்… உயிர் போகும் நேரத்தில் மனைவி பேசிய வார்த்தைகள்!!

714

திருச்சி மாவட்டம் கல்லுக்குழியில் கட்டிய மனைவியை ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு, மனைவி இறந்துவிட்டதாக கருதி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலையும் செய்து கொண்டுள்ளார்.

பீகாரை சேர்ந்த ரஜினிகுமாரி (33) திருச்சி ரயில் நிலையத்தில் அரசாங்க பணியில் இருந்து வந்துள்ளார். சுப்பு ராயலு தெருவில் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். பீகாரை சேர்ந்த இவரது கணவர் ரஞ்சித்குமார் ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

நேற்று மாலை வீட்டிற்கு வந்த ரஞ்சித்குமாருக்கும் மனைவிக்குமிடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மனைவியை வாய் மற்றும் நெஞ்சில் சுட்டுள்ளார்.

குண்டடிப்பட்ட மனைவி மூச்சற்று கீழே விழுந்ததை பார்த்த ரஜ்சித்குமார் மனைவி இறந்து விட்டதாக கருதி தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரஞ்சித்குமார் உயிரழிந்துள்ளார்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தனர் பொலிசிற்கு தகவல் கொடுத்துள்ளனர். பொலிசார் வந்த பார்த்த போது மனைவி ரஜினிகுமாரி உயிருக்கு போராடியபடி உயிருடன் இருப்பதை கண்டு அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மிகவும் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ரஜினிகுமாரி இன்று உயிரிழந்துள்ளார். தந்தையும தாயையும் இழந்த அப்பெண் குழந்தையை பாட்டி அழைத்து சென்றுள்ளார்.

குண்டடிபட்ட தருணத்தில் ரஜினிகுமாரி பேசிய ஒருசில வார்த்தையில் காணொளியாக பதிவாகியுள்ளது.