கேரள…
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த 26 வயதாகும் இளம் பெண் ஒருவர் கருகச்சால் காவல்நிலைத்தில் அளித்த புகார் அம்மாநிலத்தில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில், கணவர் உட்பட 6 பேரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் போலிஸார் விசாரணையி நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, இதுதொடர்பாக அப்பெண் அளித்த புகாரில், தன்னுடைய கணவர் அவரது நண்பர் வீட்டில் நடைபெற்ற விழா ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்குச் சென்ற பின்னர் தான் அந்த நிகழ்ச்சிக்கு எதற்காக வந்துள்ளோம் என கேட்டபோது, இளம் பெண்ணிடம் கணவரிடம் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். அதாவது கணவரின் நண்பர்களுடம் உல்லசாமாக இருக்கும் படி அவர் கட்டாயப்படுத்தியுள்ளார்.
மீறினால், குழந்தைகளை கொன்றுவிடுவதாகவும் மிரட்டு அவரை பணிய வைத்துள்ளார்.
அதோடு இல்லாமல், மனைவி வேறு ஆண்களுடம் இருக்கும் அந்தரங்கத்தை ரகசிய கேமரா மூலம் வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர் அந்தவீடியோவைக் காட்டி கடந்த 2 வருடமாக மனைவியை தனது சொந்த லாபத்திற்காக பலருக்கும் விருந்தாக்கியுள்ளார்.
இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட இளம் பெண், கணவரின் கொடுமைகள் அதிகமானதால் தற்போது வேறு வழியின்றி, போலிஸில் புகார் கொடுத்துள்ளார்.
மேலும் இந்த கொடூர சம்பவத்தில் பலரும் தொடர்பு இருப்பதாக இளம் பெண் கூறியுள்ளார். இதனையடுத்து போலிஸார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து குற்றவாளிகளை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.