மனைவியை நிர்வாணமாக சூட்கேசில் அடைத்த கொடூரன் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

1044

அரியானா….

அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள சவுக் என்ற பகுதியில் கடந்த திங்கள்கிழமை ஒரு சூட்கேஸ் கிடந்துள்ளது. அந்த சூட்கேஸை காவல்துறை கைப்பற்றி திறந்து பார்க்கையில், நிர்வாண நிலையில் பெண்ணிண் உடல் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், தடயங்கள் மற்றும் சிசிடிவி அடையாளங்களை வைத்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 22 வயதான ராகுலுக்கும் 20 வயதான மனைவி பிரியங்காவுக்கும் இரண்டாண்டுகளுக்கும் முன் திருமணம் ஆகி ஒரு வயதில் குழந்தை உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூரை சேர்ந்த ராகுல் குருகிராமில் தனியார் நிறுவனத்தில் உதவியாளராக வேலை செய்துவந்தார்.

ராகுலின் சம்பளம் அடிப்படை செலவுகளுக்கே சரியாக உள்ள நிலையில், மனைவி பிரியங்கா கணவரிடம் செல்போன் வேண்டும், டிவி வேண்டும், பிரிட்ஜ் வேண்டும் என நச்சரித்து அடிக்கடி சண்டை போட்டுள்ளார்.

மேலும், கோபத்தில் பல முறை கணவரை அறைந்துள்ளார். இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி இரவு சண்டை முற்றி அடிதடியானதில் கணவர் ராகுல் மனைவி பிரியங்காவை அடித்து கொலை செய்துள்ளார்.

இரவு முழுக்க மனைவியின் பிணத்தை வீட்டில் வைத்து குழந்தையோடு பொழுது கழித்த ராகுல், அடுத்த நாள் கடைக்கு சென்று பெரிய சூட்கேஸ் வாங்கி வந்துள்ளார். பின்னர் மனைவியின் உடைகளை களைந்து நிர்வாணமாக்கி சூட்கேசில் உடலை வைத்துள்ளார்.

அத்துடன் மனைவியின் கையில் கணவர் ராகுலின் பெயர் பச்சை குத்தி இருந்ததால், அந்த பகுதியில் சதையை கத்தியால் கிழித்து நீக்கியுள்ளார். பின்னர் ஆட்டோ பிடித்து ஏறி யாரும் இல்லாத இடத்தில் சூட்கேஸை சத்தமில்லாமல் வைத்து விட்டு வந்துள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்ட ராகுலை கைது செய்த போலீசார் ராகுலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.