மனைவியை பாலியல் தொழில் விடுதியில் விற்ற கணவன் : ஆசைவார்த்தைகள் கூறி ஏமாற்றியது அம்பலம்!!

910

தமிழகத்தில் பெண்களை காதலித்து ஏமாற்றி கடத்திச் சென்று விபச்சார கும்பலிடம் விற்ற இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(31). இவருக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மகாலட்சுமி(25) என்பவருக்கும் கடந்த 2008-ஆம் ஆண்டு திருமணமாகியுள்ளது.

திருமணமனம் ஆன பின் மனைவியை சென்னைக்கு அழைத்து சென்று சிலம்பரசன் அவரை விபச்சார விடுதியில் தள்ளிவிட்டு, தனியாக வசித்து வந்துள்ளார்.

இதையடுத்து சென்னையைச் சேர்ந்த கிரிஜா(27) என்பவரை கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்த சிலம்பரசன், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சேலம் மாவட்டம், சேத்துக்குழி, குட்டியாகவுண்டனுாரை சேர்ந்த முருகன், கொளத்துார் காவல்நிலையத்தில் சிலம்பரன் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், எங்களின், 17 வயது மகளை, சிலம்பரசன் கடத்திச்சென்றுவிட்டார். அவரை மீட்டுத்தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து இது தொடர்பாக பொலிசார் சிலம்பரசனை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, பெண்களை அழைத்துச்சென்று, ஹோட்டல் அறைகள் எடுத்து, பலாத்காரம் செய்து, சென்னையிலுள்ள விபசார விடுதிகளில் விற்று வந்தது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து அவனை கைது செய்த பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.