மனைவியை விற்று ஸ்மார்ட்போன் வாங்கிய 17 வயது கணவர் : பின்பு நடந்தது என்ன?

667

ஒடிசா..

ஒடிசா மாநிலத்தில் தனது 26 வயது மனைவியை விற்று 17 வயது கணவர் ஸ்மார்ட் போன் வாங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் பலங்கிர் மாவட்டம் பெல்படா பகுதியில் 17 வயது சிறுவனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம் பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், இருவரும் கூலி தொழிலாளியாக ராஜஸ்தான் மாநிலத்தில் செங்கல் சூளையில் வேலைக்கு சேர்ந்துள்ளனர்.

அப்போது அதே மாநிலத்தைச் சேர்ந்த 55 வயது முதியவர் குறித்த சிறுவனுக்கு அறிமுகமாகியநிலையில், சிறுவன் தனது மனைவியை 1.8 லட்சம் ரூபாய்க்கு விற்பதற்கு பேசியுள்ளார்.

அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு நன்றாக சாப்பிட்டும், தான் ஆசைப்பட்ட போனை வாங்கிக்கொண்டு ஊருக்கு திரும்பியுள்ளார்.

அங்கு மனைவியை எங்கே என்று உறவினர்கள் கேட்டதற்கு வேறு ஒருவருடன் சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் பெண் வீட்டினருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் சிறுவனிடம் விசாரித்ததில் மனைவியை விற்றதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

குறித்த பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த பொலிசார் சிறுவனை, சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்.