மனைவி செல்போனை தொடத் தடை: சவுதியில் புதிய சட்டத்தால் கணவர்கள் அதிர்ச்சி!!

657

மனைவிக்கு தெரியாமல் அவர்களது போனை எடுத்து சோதனை செய்யும் கணவர்களுக்கு ஒரு ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று சவுதி அரசு அறிவித்துள்ளது.

சவுதி பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றது.

பெண்கள் ராணுவத்தில் சேருவதற்கு அனுமதி, சினிமா தியேட்டர்களில் அனுமதி, கார் ஓட்ட லைசென்ஸ் வழங்குதல் உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதற்கு பாராட்டும் மறுபுறத்தில் எதிர்ப்பும் நிலவி வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக மனைவிக்கு தெரியாமல் அவர்களது செல்போனை எடுத்து சோதனை செய்யும் ஆண்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று சவுதி அரசு அறிவித்துள்ளது.

இதன்படி மனைவியின் போனை எடுத்து பார்ப்பது, கேலரியை பார்ப்பது சமூக வலைதளங்களை சோதனை செய்வது, யாருடன் பேசுகிறார் என்று பார்த்து சண்டையிடுவது போன்ற செயல்கள் எல்லாம் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் ஆண்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல், 133,000 டொலர் அபராதமாக விதிக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சவுதியில் சமீபகாலமாக மொபைல் போன் தொடர்பான குற்றங்கள் அதிகரித்துள்ளது. இந்த தண்டனை மூலம் இதனை கட்டுப்படுத்தலாம் என்று இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

மேலும் பெண்களுக்கு சுதந்திரம் தேவை மற்றும் ஆண்களின் வேவு பார்க்கும் குணத்தை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.