மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

257

புதுச்சேரி…

புதுச்சேரி வில்லியனூர் ஒட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் கணேஷ் – அழகு மீனா தம்பதியினர், இதில் இரண்டு பேரும் இரண்டாம் திருமணம் செய்து கொண்டவர்கள் என கூறப்படுகிறது.

இவர்களுக்கு 6 வயதில் ஒரு குழந்தை உள்ளது, இதில் அழகு மீனா நகர பகுதியான சின்ன மணி கூண்டு அருகே உள்ள ஒரு அழுகு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். கணேஷ் பெயிண்டராக உள்ளார்.

இந்நிலையில் இன்று மதியம் அழகு மீனா பணி புரியும் அழகு நிலையத்திற்கு சென்ற கணேஷ் மீனா மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி உள்ளார். தீப்பிடித்ததால் மீனா அலறிய உடன் கணேஷ் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

கை, முகம் மற்றும் தோள்ளில் தீ காயம் ஏற்பட்ட மீனாவை அருகிலிருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து ஒதியஞ்சாலை போலிசார் வழக்கு பதிவு செய்து மனைவி மீது மன்னெனெய் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த கணவர் கணேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.