மன்னித்து விடு ஆஷிபா… இது இரக்கமுள்ள நாடுதானா? கொந்தளித்த இந்திய பிரபலங்கள்!!

638

ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிபா என்ற முஸ்லீம் சிறுமியை 8 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக கற்பழித்து கொலை செய்துள்ளது ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிறுமி ஆஷிபாவுக்கு நீதி கேட்டு, #JusticeforAsifa என்ற ஹேஸ்டேக் சமூகவலைதளங்களில் டிரெண்டாகியுள்ளது.இந்நிலையில் சிறுமிக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ள இந்திய பிரபலங்கள் இதோ,

கிரிக்கெட் வீரர் கம்பீர்
இந்தியர்களின் மனசாட்சி பலாத்காரம் செய்யப்பட்டுவிட்டது. தவறு செய்தவர்கள் இந்த நிர்வாக முறையால் தண்டிக்கப்படுவார்களா?. நான் சவால் விடுகிறேன், பாதிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி உங்களில் ஒருவரின் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள்?”

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா
இது உண்மையில் இரக்கமுள்ள நாடுதானா, நம்முடைய இனம், பாலினம், மதம் ஆகியவற்றை மறந்து கதுவாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 8 வயது சிறுமிக்கு நியாயம் கிடைக்க நாம் குரல் கொடுக்காவிட்டால், நாம் இந்த உலகில் வேறு எதற்கு நாம் ஆதரவாக குரல்கொடுக்கப் போகிறோம்.பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்.

நடிகை சோனம் கபூர்
போலி தேசியவாதிகள் மற்றும் போலி இந்துக்களால் வெட்கப்படவேண்டியுள்ளது. இது என் நாட்டில் நடக்கிறது என்று என்னால் நம்ப முடியவில்லை.

ராதிகா சரத்குமார்
இது மிகவும் மனிதாபிமானமற்றது, இந்த சமுதாயத்தை அறிவது மிகவும் கொடூரமானது. இந்த விலங்குகள் தண்டிக்கப்பட வேண்டும்.

திவ்ய தர்ஷினி
மனிதகுலம் மெதுவாக இந்த பூமியை இழந்து வருகிறது . சக மனிதர்கள் மீது மனித இரக்கமின்மை இல்லாதது எல்லா பிரச்சனைகளுக்கும் ஆதாரமாக உள்ளது. மிகவும் குழப்பமானது. இதயம் உடைகிறது.

நடிகர் அக்ஷய் குமார்
மீண்டும் ஒருமுறை சமுதாயத்தில் நாம் தோல்வியடைந்தோம். சிறுமி ஆஷிபா வழக்கில் வெளிப்படையான விவரங்கள் தெரியவில்லை. அவரது அப்பாவி முகம் என்னை விட்டு விலக மறுக்கிறது. நீதி வழங்கப்பட வேண்டும், மிக வேகமாக!

மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்
மன்னித்துவிடு ஆசிஃபா இந்த நாடு உனக்கான பாதுகாப்பை தரவில்லை. உன்னுடைய நீதிக்காக நான் போராடுவேன், குறைந்தபட்சம் எதிர்காலத்திலாவது உன்னைப் போன்ற நிலை எந்த குழந்தைக்கும் வராமல் இருக்க போராடுவேன். உனக்காக துயரப்படுகிறேன், என்றுமே உன்னை மறக்கமாட்டேன்.