மயக்க மருந்து கொடுத்தால் நடப்பதே தெரியாது! காப்பகத்திலிருந்து தப்பிய இரண்டு பெண்கள் கண்ணீர்!!

576

தமிழகத்தில் காப்பகத்தில் எங்களை அடித்து துன்புறுத்துவார்கள் என்று காப்பகத்திலிருந்து தப்பிய பெண்கள் கண்ணீர் மல்க கூறியதைக் கேட்டு கிராம மக்கள் வேதனையடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பெண்கள் காப்பகம் ஒன்று உள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த காப்பகத்திலிருந்து தப்பி வந்த இரண்டு பெண்கள் அருகிலிருக்கும் வடுகபட்டி கிராமத்தில் சென்று அங்கிருக்கும் டீ கடையில் எங்களை காப்பாற்றும் படி கூறியுள்ளனர்.

உடனடியாக டீ கடையில் இருந்தவர்கள் மற்றும் கிராமத்தினர் விசாரித்த போது அந்த பெண்கள், காப்பகத்தில் எங்களை அடித்துத் துன்புறுத்துகிறார்கள்.

சொல்வதைக் கேட்கவில்லையென்றால் குடிக்கும் பொருளில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து விடுகிறார்கள். பிறகு என்ன நடக்கிறது என்றே தெரியாது.

தினம் தினம் உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் அங்கே இருக்கிறோம். எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.

அந்த நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த காப்பக நிர்வாகிகள் அப்துல் காதர் முனீர் (39) காதர் மீரா மைதீன் (28) ஆகியோர் இந்த இரண்டு பெண்களை தேடி வந்துள்ளனர்.

ஆத்திரத்தில் இருந்த ஊர்மக்கள் உடனடியாக அவர்களை பிடித்து அடித்து உதைத்துள்ளனர். அதன் பின் இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் இதே போன்று ஒரு சம்பவம் நடந்தது.அப்போது ஆறு பெண்கள் நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு வைத்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

தற்போதும் அந்த காப்பகத்தில் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளதால், மாவட்ட நிர்வாகம் இனியும் தாமதிக்காமல் உரிய நடவடிக்கை என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.