மயக்க மருந்தை உணவில் கலந்துக்கொடுத்து இளம்பெண்ணால் சிறுமிக்கு அரங்கேறிய கொடூரம்!!

310

அரியானா…

அரியானா மாநிலம் ஜுண்ட் மாவட்டம் ஹர்ஹீ கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமி தனது வீட்டிற்கு அருகே வாடகைக்கு வசித்து வரும் பெண்ணை சந்திப்பதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி சென்றுள்ளார்.

அங்கு, அந்த பெண் தனது வீட்டில் வைத்து சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த உணவை கொடுத்துள்ளார். இதை பற்றி எதுவும் அறியாத அந்த அப்பாவி சிறுமி அந்த உணவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மயக்கமடைந்துள்ளார்.

பின்னர், அந்த பெண் தனது கூட்டாளிகளான இரு ஆண் நண்பர்களை வரவழைத்து, மயக்க நிலையில் இருந்த அந்த சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதை அந்த பெண் வீடியோவாக எடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த சிறுமியிடம் இந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக யாரிடமும் தெரிவிக்கக்கூடாது எனவும், மீறி தெரிவித்தால் வீடியோவை சமூகவலைதளத்தில் போட்டுவிடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி தனக்கு நடந்த கொடூரத்தை யாரிடமும் தெரிவிக்காமல் மறைத்துள்ளார்.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த பெண்ணும், அவரின் ஆண் நண்பர்களும் சிறுமியிடம் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

மேலும், பணம் தரவில்லை என்றால் பாலியல் வன்கொடுமை வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டுவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

அவர்களின் மிரட்டலுக்கு பயந்து அந்த சிறுமி தொடர்ந்து பணத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில், அந்த கும்பல் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததாலும்,

மிரட்டல் விடுத்ததாலும் அந்த சிறுமி வேறுவழியின்றி தனக்கு நடந்த துயரத்தை 5 மாதங்களுக்கு பிறகு கடந்த சனிக்கிழமையன்று தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தாயார் உடனடியாக போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இருவரையும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த பெண்ணையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.