மருத்துவமனையில் தாய்… உயிரிழந்த தந்தை! தவிக்கும் இரண்டு பிள்ளைகளின் பரிதாப நிலை !!

524

சென்னை……………

கொரோனா பெருந்தொற்றால் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் உயிரிழந்துள்ளார். சென்னை மாநகராட்சி ஆலந்தூர் 12-வது மண்டலத்தில் உள்ள 159-வது வட்டம் மீனம்பாக்கம் பகுதி சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஈஸ்வரன் (51).

இந்த நிலையில் கடந்த 29-ந் திகதி ஈஸ்வரனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதற்காக கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து ஈஸ்வரன் மனைவி செந்திலாவதியும் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தம்பதிக்கு பிரகதீஸ்வரன், ஹரிகிருஷ்ணன் என 2 பிள்ளைகள் உள்ள நிலையில் தந்தையை பறிகொடுத்துவிட்டு தவித்து வருகின்றனர்.