சென்னை…
சென்னை, மாம்பலத்தைச் சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது மனைவி ஷாகினுக்கும், தாய் தாஜ் நிஷாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 2014 நவம்பர் 26ம் தேதி ஷாகினுக்கும், அவரது மாமியாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மாமியார் தாஜ் நிஷா, கொதிக்கும் எண்ணெயை ஷாகின் மீது ஊற்றியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த ஷாகின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் 2014 டிசம்பர் 17ம் தேதி மரணமடைந்தார்.
தாஜ் நிஷாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கை விசாரித்த சென்னை அல்லிகுளம் மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.எம்.முகமது பாருக், குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, தாஜ் நிஷாவுக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
குடும்ப தகராறில் மருமகள் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை செய்த வழக்கில் மாமியாருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.