மர்மான முறையில் காணாமல் போன கேரள மாணவி! 100 நாட்கள் கழித்து சிசிடிவில் சிக்கிய காட்சி

837

கேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள வெச்சூசிரா பகுதியில் காணாமல் போன கல்லூரி மாணவி ஜெஸ்னா குறித்த சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன.அவரை தேடும் பணி 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், காவல்துறையினருக்கு ஒரு புதிய தடயம் கிடைத்துள்ளது.

அதாவது முன்டக்கயம் பகுதியில் கிடைத்த ஒரு சிசிடிவி கமெராவின் காட்சியில் ஜெஸ்னா பதிவாகியுள்ளார். அதில் கையில் ஒரு பையுடனும், தோளில் ஒரு பையுடனும் ஜெஸ்னா ஒரு கடைக்குள் செல்கிறார். இந்தக் காட்சிகளைக்கொண்டு காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

அதன்பின்னர் 6 நிமிடங்களுக்கு பின் ஜெஸ்னாவின் ஆண் நண்பர் ஒருவர் அந்தக் கடைக்குள் செல்கிறார். ஏற்கனவே காவல்துறையினரின் விசாரணையில், ஜெஸ்னா காணாமல் போன கடைசி நேரங்களில் இந்த ஆண் நண்பருக்கு அதிக போன் கால் செய்ததும், மெசேஜ் அனுப்பியதும் தெரியவந்துள்ளது.

ஆனால் அந்தக் கடைக்குள் இருந்து அவர்கள் இருவரும் வெளியே வரும் காட்சிகள் இல்லை. இதனால் அந்த நபர் மீது சந்தேகம் கொண்டு, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.