மலைப்பாம்பு விற்பனைக்கு : கழுத்தில் மாட்டி கொண்டு விளம்பரம் கொடுத்த நபர் : இறுதியில் நடந்த விபரீதம்!!

884

மலைப்பாம்பு விற்பனைக்கு

இந்தியாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் விளம்பரம் செய்து 2 பாம்புகளை விற்க முயன்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள சவ்தர்குடா பகுதியைச் சேர்ந்தவர் ஷரோன் மோசஸ்.

மோசஸ், மலைப்பாம்பின் குட்டியை தனது நண்பன் கழுத்தில் போட்ட புகைப்படத்தை பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகிய சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அதில், தங்களிடம் மலைபாம்பு மற்றும் கொம்பேரி மூக்கன் ஆகிய 2 பாம்புகள் விற்பனைக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார். பாம்பின் விலை ரூ.24000 என அவர் கூறினார்.

குறித்த பதிவு வைரலான நிலையில் இது வனத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள், பொலிஸ் உதவியுடன் சென்று ஷரோன் மோசஸ் மற்றும் அவனது நண்பன் பிரவீன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 2 பாம்புகளையும் வனத்துறையினர் மீட்டுள்ளனர்.