மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கல்லூரி பேராசிரியர் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!

214

கோவை…

கல்லூரி மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கல்லூரி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில், பள்ளி வளாகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டுகளை காட்டிலும் தற்போது பாலியல் குற்றங்கள் பல மடங்கு அதிகரித்து உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன்.

அந்த வகையிக் அண்மையில் கோவை மாவட்டம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு, அவர் படித்து வந்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதை அடுத்து தமிழக அரசு பாலியல் தொல்லை குறித்த புகார்களை அளிக்க அவசர உதவி எண்ணை வெளியிட்டு எந்த நேரத்திலும் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தது.

இருந்தபோதிலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்த வகையில் தற்போது, கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள கலைக் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு அக்கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் செல்போன் மூலமாக ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள விவேகானந்தா கலைக் கல்லூரியில் அங்குள்ள தென்தாமரை குளம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.

அவருக்கு அதே கல்லூரியில் பணிபுரிந்து வரும் பேராசிரியர் மகாதேவன் என்பவர் செல்போன் மூலமாக ஆபாச குறுந்தகவல்களை அனுப்பியதாக மாணவி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து பேராசியர் மீது எந்தவிதமான நடவடிக்கையோ விசாரணையோ கல்லூரி நிர்வாகம் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவ, மாணவியர்கள் புகாருக்கு உள்ளான பேராசியரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்தும் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவ, மாணவிர்களிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.