மாணவியின் கழுத்து அறுப்பு… வாலிபரின் வெறிச்செயல் : அதிர்ச்சியில் பெற்றோர்!!

209

ஆந்திர…

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடகிரி பகுதியை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண் ஜோதிகா.

இவரை அதே பகுதியை சேர்ந்த செஞ்சு கிருஷ்ணா என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், செஞ்சு கிருஷ்ணாவின் காதலை ஜோதிகா ஏற்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த ஜோதிகாவை வழிமறித்து வாக்குவாதம் செய்ததோடு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு ஜோதிகாவின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார்.

சத்தம்கேட்டு வந்த பொதுமக்கள், அங்குள்ள ஜோதிகாவை மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது மேல் சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான செஞ்சு கிருஷ்ணாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.